பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்

பாகிஸ்தானில் புகழ்பெற்ற தேவாலயத்தில் தற்கொலை படையினர் நேற்று நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 56 பேர் இறந்தனர்.
பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் பாகிஸ்தான் சர்ச் என்ற புகழ் பெற்ற பழமையான தேவாலயம் உள்ளது.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் அமைந்துள்ள இந்த தேவாலயத்தில் ஞாயிறுதோறும் சிறப்பு பிரார்த்தனைகள் நடப்பது வழக்கம்.

நேற்று காலையும் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது. பிரார்த்தனை முடிந்த பின் மக்கள் வெளியே வந்தனர். அப்போது, தற்கொலை படை தீவிரவாதிகள் 2 பேர் தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 56 பேர் உடல் சிதறி இறந்தனர்.

குண்டு வெடிப்பு நடந்தபோது, தேவாலயத்தில் 700 பேர் வரை இருந்தனர். குண்டு வெடிப்பிலும் பீதியால் மக்கள் சிதறி ஓடியதிலும் 80 பேர் காயமடைந்தனர். அவர்கள் பெஷாவர் நகரில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

 

You may also like ...

நியூஸிலாந்தில் தாக்குதல் நடத்திய நபர் மீது 50 கொலை குற்றச்சாட்டுகள்

நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு தொடர்பாக கைது செய்யப

இலங்கை கிரிக்கெட் நிறுவன நிதி மோசடி சம்பவம் சைபர் தாக்குதல் இல்லை

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறவிருந்த பாரி

புதிய தொகுப்புகள்