Language :     Englishதமிழ்

ஜப்பானில் சூறாவளி: விமான - ரயில் சேவை ரத்து

இன்று(18) - மத்திய ஜப்பானை தாக்கியுள்ள "மான் யி" சூறாவளியினால் மேலும் கனமழை பெய்ய இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் புரூஷிமா அணு உலை பாதிக்கப்பட கூடும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.இதனால் டோக்கியோ செல்லும் விமானங்கள் உட்பட 350 உள்நாட்டு விமானங்கள் மற்றும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

டோமோஹாஷி என்ற இடத்தில் உள்ள ஆய்ச்சி கடலோர பகுதியில் 100 மைல் வேகத்தில் சூறாவளி காற்று வீசியதாக ஜப்பான் விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஷிகா கடலோர பகுதியில் 70 வயது பெண் ஒருவரை காணவில்லை என்றும் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஜப்பானிய செய்தி நிறுவனமான என்.ஹெச்.கே. தெரிவித்துள்ளது.  இந்த சூறாவளியானது தலைநகர் டோக்கியோ மஹ்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தாக்க கூடும் என்று அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

கனமழைக்கான வாய்ப்பு இருப்பதால் கியோட்டோ மற்றும் அதனருகே உள்ள கடலோர பகுதியை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த சூறாவளியானது பெருமழையுடன் புரூஷிமா அணு உலையை கடக்க கூடும் எந்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கதிரியக்க கொள் கலனை சுற்றி தேங்கும் மழை நீர் வெளியேற்றப்பட்டு நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயமுள்ளது. முன்னதாக 2011 ம் ஆண்டு மார்ச் மாதம் 11 ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் கதிரியக்கம் வாய்ந்த பொருட்கள் பசிபிக் கடலில் விழுந்து நிலத்தடி நீர்வளம் மாசடைந்தது.

 



You may also like ...

முகத்திற்கு புத்துணர்ச்சி தரும் கொய்யா இலை - சூப்பர் டிப்ஸ் இதோ!

கொய்யா இலைகளை முன்பெல்லாம் மருத்துவத்தில் பயன்படுத

உலகளவில் கொரோனா பாதிப்பு - ஒரே பார்வையில்!

உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்த

புதிய தொகுப்புகள்