இந்தியாவுடன் பேச பாகிஸ்தான் ஆர்வம்

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மூன்று நாள் பயணமாக துருக்கி சென்றுள்ளார். அங்குள்ள செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டி:
அண்டை நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்துவதற்காகத்தான் பாகிஸ்தான் மக்கள் என்னை தேர்ந்தெடுத்துள்ளனர்.

 

அனைத்து நாடுகளுடனும் ஒத்துழைப்புடன் செயல்பட்டு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் எனது அரசு வெளியுறவு கொள்கைகளை வகுத்துள்ளது. சமூக பொருளாதார முன்னேற்றத்துக்கு அண்டை நாடுகளுடனான உறவு மிக முக்கியம்.


எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் நிலவும் பதற்றம் கவலையளிக்கிறது. இந்த நிலையை போக்க பாகிஸ்தான் பொறுப்புடன் நடந்து கொள்ளும். நிலையான அமைதிக்காக இந்தியாவுடன் நல்லுறவுடன் இருக்க அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். ஜம்மு காஷ்மீர் உட்பட அனைத்து பிரச்னைகள் குறித்தும் இந்தியாவுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் ஆர்வமாக உள்ளது.

இதற்கான  நடவடிக்கையை, முன்னாள் இந்தியப் பிரதமர் வாஜ்பாய் கடந்த 1999ம் ஆண்டு லாகூர் வந்தபோதே தொடங்கினேன். அப்போது காஷ்மீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இருதரப்பும் முடிவு செய்திருந்தது. பாகிஸ்தானில் தலிபான் பிரச்னையும் உள்ளது. தீவிரவாதத்தை கைவிட்டால், தலிபான்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது. இவ்வாறு நவாஸ் ஷெரீப் கூறினார்.

 

You may also like ...

World Cup 2019 - பங்களாதேஷ் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி!

பங்களாதேஷ் அணியை 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்

இலங்கை – பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு 19 வ

புதிய தொகுப்புகள்