சிரியா அருகே 26 பயணிகளுடன் சென்ற ரஷ்ய ராணுவ போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதில் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் உயிரிழந்துள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது, சிரியாவின் Khmeimim விமான நிலையத்தில் குறித்த விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.
இதில் விமானி உள்ளிட்ட ஊழியர்கள் 6 பேரும் ராணுவத்தினர் 26 பேரும் சம்பவயிடத்தில் உடல் கருகி பலியானதாக கூறப்படுகிறது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விமான ஓடு தளத்தில் மோதிய பின்னரே விமானம் வெடித்துச் சிதறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவத்தை அடுத்து மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதுவரை சிரியாவில் 5 முறை ரஷ்ய விமானங்கள் விபத்தில் சிக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.