பிரான்ஸில் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலில் பலியான சுவிஸ் பெண் மற்றும் அவரது 6 வயது பெண் குழந்தைக்கு சுவிஸ் மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
பிரான்ஸில் உள்ள நைஸ் நகரில் தேசிய தினம் கொண்டாடிய கூட்டத்தினர் மீது லொறி தாக்குதல் நடத்தியதில் 84 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொண்டாட்டத்தில் சுவிஸ் Yverdon பகுதியை சேர்ந்த ஒரு தம்பதி மற்றும் அவர்களுடைய 3 குழந்தைகள் கலந்து கொண்டனர்.
இந்த சமயத்தில் நடந்த இந்த கொடூர தாக்குதலில் அந்த பெண் மற்றும் அவருடைய 6 வயது குழந்தை லொறியில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அதே சமயம் அதிர்ஷ்டவசமாக அவரது கணவர் மற்றும் மீதமுள்ள குழந்தைகள் உயிர் தப்பியுள்ளனர்.
உயிரிழந்த இந்த பெண்ணின் பெயர் கிறிஸ்டினா மற்றும் அந்த 6 வயது பெண் குழந்தையின் பெயர் காயல்யா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பெண்ணை Yverdon பகுதி மக்களுக்கு மிகவும் நன்றாக தெரியும் என்பதால் அவர்கள் கிறிஸ்டினா மற்றும் அவரது குழந்தைக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
நேற்று இரவு நகரின் மத்தியில் உள்ள சர்ச்சின் வெளியே ஒன்று கூடிய 250க்கும் அதிகமான மக்கள் மலர் வளையம் மற்றும் பூங்கொத்து வைத்து அவர்களுக்கு அஞ்சலியை செலுத்தினர்.