ஜேர்மனியில் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் திருமணமாகாத பெற்றோர்களுக்கே பிறக்கின்றதாக புள்ளியல் விவரங்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார ஆராய்ச்சி கொலோன் நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளியில் விபரத்தில், கடந்த 2014ம் ஆண்டு 35 சதவீத குழந்தைகள் திருமணமாகாத பெற்றோருக்கு பிறந்துள்ளன.
சோசியலிச கிழக்கு ஜேர்மனியை விட, மேற்கு ஜேர்மனியை சேர்ந்த 29 சதவீதத்தினர் தாங்கள் திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும், தங்களுக்கு கிடைத்த புது உறவுடன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிக்கின்றனர்.
ஜேர்மனில் பாதி குழந்தைகள் திருமணம் செய்து கொள்ளாத பெற்றோருக்கே பிறப்பதாக தெரியவந்துள்ளது, பெர்லினை சுற்றியுள்ள சில இடங்களில் இந்த சதவீதம் 70 ஆக உள்ளது.
பிற நகரங்களை ஒப்பிடுகையில் Baden-Württemberg மற்றும் Bavaria ஆகிய நகரங்களில் திருமணமான பெற்றோருக்கே குழந்தைகள் பிறக்கின்றனர்.
அதே போல் ஜேர்மனியில் திருமணம் முடிக்கும் சிலரே நீண்ட நாட்களுக்கு தங்களது வாழ்கையை தொடர்கின்றனர். சிலர் விரைவில் விவாகரத்தும் செய்து கொள்கின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளை ஒப்பிடுகையில் 2015ம் ஆண்டில் விவாகரத்து செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த விவாகரத்திற்கு அதிக குழந்தைகளே காரணமாக கூறப்பட்டது.