விமான பயணத்தின் போது பயணி ஒருவர், “அல்லாஹ் அக்பர் விமானம் வெடிக்கப்போகிறது” என சத்தம் போட்டு கத்தியாதால் அவருக்கு 10 வார சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 5 ஆம் திகதி Emirates Boeing 777 என்ற விமானம் துபாயில் இருந்து பிரித்தானியாவில் உள்ள Birmingham நகரை நோக்கி பயணித்துள்ளது.
விமானம் தரையிறங்குவதற்கு முன்னர், அதில் பயணித்த Shehraz Sarwar(38) என்ற இஸ்லாமிய பயணி, அல்லாஹ் அக்பர், விமானம் வெடிக்கப்போகிறது என சத்தம் போட்டு கத்தியுள்ளார்.
இதனைக்கேட்ட 347 பயணிகளும் அச்சத்தில் கண்ணீர் வடித்துள்ளனர், அதன் பின்னர் விமான ஊழியர்கள், அந்நபர் மற்றும் பயணிகளை சமாதானப்படுத்தினர்,
இதனைத் தொடர்ந்து விமானம் தரையிறங்கிய பின்னர், அந்நபர் விசாரணை வளையத்திற்குள் உட்படுத்தப்பட்டார், இந்நபர் விமானத்தில் கத்தியதன் காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி இவர் மீது வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்றது, இதனை விசாரித்த நீதிபதி கூறியதாவது, விமான பயணத்தின்போது, இந்நபர் வார்த்தைகளால் சகபயணிகளை அச்சுறுத்தியுள்ளார்.
அதுமட்டுமின்றி, விமானத்தில் சீட் பெல்டினை போடுவதற்கும் மறுத்துள்ளார், இதுபோன்ற இவரின் ஒழுங்கு மீறிய செயல்கள் கண்டிக்கதக்கதாகும் என கூறியுள்ளார்.
Shehraz Sarwar ன் வழக்கறிஞர் Balbir Singh கூறியதாவது, என்னுடைய கட்சிக்காரர் தனது பாட்டியின் இறுதிச்சடங்கில் பங்கேற்று விட்டு திரும்பி சென்றதால் மிகவும் மனவருத்தத்தோடு இருந்துள்ளார்.
இந்த காரணத்தினாலேயே அவர் இவ்வாறு நடந்து கொண்டார் என்று கூறியுள்ளார், இதனைக்கேட்ட நீதிபதி, பயணியின் செயல் முட்டாள்தனமாக உள்ளது என்றும் இது போன்ற செயல்கள் பொதுமக்களுக்கு விளைவினை ஏற்படுத்தும் எனக்கூறி 10 வாரங்கள் சிறைதண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.