உயிருக்கு போராடிய மகன்: மிளகாய் பொடியை மருந்தாக கொடுத்த பெற்றோருக்கு சிறை தண்டனை
கனடா நாட்டில் உயிருக்கு போராடிய 2 வயது மகனை காப்பாற்ற தவறிய பெற்றோருக்கு நீதிமன்றம் அதிரடி தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
அல்பேர்ட்டா நகரில் டேவிட் ஸ்டீபன் மற்றும் கொல்லட் என்ற தம்பதிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்பட 19 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் இருந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டு 19 மாத குழந்தைக்கு திடீரென உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது.
குழந்தைக்கு சாதாரண காய்ச்சலாக இருக்கும் என தவறாக எண்ணிய பெற்றோர் குழந்தைக்கு மிளகாய் பொடி, பூண்டு, வெங்காயம் உள்ளிட்டவைகளை கலந்து கொடுத்துள்ளனர்.
குழந்தையின் உடல்நிலை மோசமாக பெற்றோர் மருத்துவரிடம் கொண்டு சேர்த்தனர். குழந்தையை பரிசோதனை செய்த போது அதற்கு பாக்டீரியா மூளைக்காய்ச்சல் நோய் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
அதேசமயம், குழந்தையை சரியான நேரத்தில் கொண்டு வராததால், அது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றம் விசாரணையில் நடைப்பெற்று வந்துள்ளது.
இந்த வழக்கின் இறுதி வாதம் நேற்று முன் தினம் நீதிமன்றத்திற்கு வந்த போது, பெற்றோர் நீதிபதி முன்னிலையில் ஆஜர் ஆயினர்.
அப்போது, குழந்தைக்கு பெற்றோர் தக்க நேரத்தில் சரியான மருத்துவம் அளிக்கவில்லை என்பது நிரூபிக்கப்பட்டது.
எனவே, தந்தைக்கு 4 மாதங்கள் சிறை தண்டனையும், தாயிற்கு 3 மாதங்கள் வீட்டுக்காவலில் வைக்கவும் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
வீட்டுக்காவலில் இருப்பவர் மருத்துவ உதவிக்கு மற்றும் தேவாலய தொழுகை தவிர மற்ற விடயங்களுக்கு வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தண்டனை காலம் முடிந்த பின்னர் இருவரும் 240 மணி நேரம் சமூகப் பணியில் ஈடுப்பட வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.