சுவிட்சர்லாந்து நாட்டில் வாலிபர் ஒருவர் தண்டவாளத்தின் மீது நடந்து சென்ற போது ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் பேர்ன் நகரிலிருந்து பயணிகள் ரயில் இன்று காலை 8 மணியளவில் புறப்பட்டுள்ளது.
Laupen மற்றும் Neuenegg ஆகிய பகுதிகளுக்கு இடையில் ரயில் சென்ற போது ஒரு விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ரயில் வருவதற்கு எதிர் திசையில், 19 வயதான வாலிபர் ஒருவர் தண்டவாளத்தின் மீது கூலாக நடந்துச் சென்றுள்ளார்.
வாலிபரை தூரத்திலேயே கண்டறிந்த ரயில் ஓட்டுனர் உடனடியாக ரயிலின் அபாய ஒலியை எழுப்பினார். ஆனால், ரயிலின் வேகத்தை உடனடியாக கட்டுப்படுத்த முடியவில்லை.
எனினும், ரயிலின் எச்சரிக்கை ஒலியை கேட்ட அந்த வாலிபர் அதிர்ச்சி அடைந்து தண்டவளாத்திலிருந்து வேகமாக விலகிச் சென்று தண்டவாளத்தை விட்டு சில அடிகள் தூரம் சென்றுள்ளார்.
ஆனால், பாய்ந்து வந்த ரயில் அவர் மீது மோதி தூக்கி வீசியுள்ளது. இதில் அந்த வாலிபருக்கு படுகாயம் ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவல் பெற்று ஆம்புலன்ஸ் அங்கு சென்று வாலிபரை ஏற்றிக்கொண்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளது.
வாலிபர் எதற்காக தண்டவாளத்தின் மீது நடந்துச் சென்றார் எனத் தெரியாத நிலையில், இந்த விபத்து தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.