அமெரிக்காவில் விமான பயணத்தின்போது தூக்கத்தில் இருந்த இளம்பெண்ணை முத்தமிட முயன்ற இளைஞன் ஒருவர் பொலிசாரால் கைதாகியுள்ளார்.
அலாஸ்கா விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று போர்ட்லாண்ட் பகுதியில் இருந்து Anchorage பகுதிக்கு சென்றுகொண்டிருந்தது.
அப்போது அந்த விமானத்தில் 16 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தூங்கியபடியே பயணித்து வந்துள்ளார்.
இதனிடையே தூக்கத்தில் இருந்த இளம்பெண்ணை அவரது அருகில் இருந்து பயணம் செய்து வந்த 23 வயதான இளைஞன் ஒருவன் திடீரென முத்தமிட முயன்றுள்ளான்.
இச்சம்பவம் விமானியிடம் தெரிவித்ததையடுத்து அந்த பயணிகள் இருவரையும் வேறு வேறு இருக்கைகளில் அமர்த்தியுள்ளனர்.
மேலும் விமானத்தை சியாட்டில் பகுதியில் உள்ள டகோமா விமான நிலையம் நோக்கி திருப்பிவிட்டுள்ளனர். அங்கு விமானம் தரையிறங்கியதும், சம்பந்தப்பட்ட அந்த இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
குறிப்பிட்ட இளம்பெண்ணை பயணத்தை தொடர அனுமதி அளித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் போர்ட்லாண்ட் பகுதியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் 26 வயது நபர் ஒருவர் 13 வயது சிறுமியை பாலியல் ரீதியாக தொல்லை தந்த வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.