ஜேர்மனியில் கட்டுமானத்தில் இருந்த பாலம் ஒன்று உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஜேர்மனியின் றுநசநெஉம பகுதியில் கட்டுமானத்தில் இருந்த நெடுஞ்சாலையை இணைக்கும் பாலத்தின் ஒரு பகுதியானது உடைந்து விழுந்துள்ளது.
பாலம் உடைந்து விழுந்து விபத்துக்குள்ளாகும்போது 20 தொழிலாளர்கள் அப்பகுதியில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதில் ஒருவர் சம்பவயிடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 6 நபர்கள் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் மேலும் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும்கூறப்படுகிறது. முன்னதாக பாலம் உடைந்து விழுந்த விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியானது.
ஆனால் இடிபாடுகளை அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் அதுகுறித்த உறுதியான தகவலை பொலிஸ் தரப்பு வெளியிட மறுத்துள்ளது.
236 மீற்றர் நீளம் கொண்ட இந்த பாலத்தின் கட்டுமான பணியானது கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. அடுத்த ஆண்டு பாலத்தின் பணிகள் மொத்தமும் முடிவடைந்து பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும் என கருதப்பட்டது.
தற்போது பாலத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்துள்ளதால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அதன் பின்னரே அடுத்தகட்ட பணிகள் துவங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.