சுவிட்சர்லாந்து நாட்டில் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு பணம் கொடுக்காமல் தப்பிய வாலிபர் ஒருவரை துரத்தி சென்ற பொலிசார் ஜேர்மனியில் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸில் உள்ள பேசல் நகரை சேர்ந்த 19 வயதான வாலிபர் ஒருவர் தனது நண்பருடன் கடந்த திங்கள் கிழமை அன்று சுவிஸ் எல்லைக்கு அருகே உள்ள பெட்ரோல் நிரப்பும் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
காரின் டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்பிய அந்த வாலிபர் ஊழியரின் கவனம் சிதறியதும் அங்கிருந்து கண் இமைக்கும் நேரத்தில் தப்பியுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த ஊழியர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். வாலிபர்கள் இருவர் சென்ற திசை குறித்து அறிந்துக்கொண்ட பொலிசார் அவரை விரட்டி சென்றுள்ளனர்.
ஆனால், வாலிபர்கள் சுவிஸ் எல்லையை தாண்டி ஜேர்மனியில் உள்ள ழுவவநசடியஉh என்ற பகுதிக்கு நுழைந்துள்ளான். துரத்தி சென்ற பொலிசார் எல்லைப் பாதுகாப்பு வீரர்களின் உதவியை பெற்று வாலிபர்களை தேடியுள்ளனர்.
பின்னர், சுமார் 10.45 மணியளவில் காரை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு நின்றுருந்த வாலிபர் ஒருவரை சுற்றி வளைத்து பொலிசார் கைது செய்தனர். இருவரில் ஒருவன் பொலிசாரிடமிருந்து தப்பியுள்ளதாக பேசல் நகர பொலிசார் தெரிவித்துள்ளனர். இருவரின் மீதும் வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.