நியூயார்க்கில் உள்ள மத்திய பூங்கா, அதிகமாக படமாக்கப்பட்ட உலகின் முக்கிய இடங்களில் ஒன்று.
2013 ல் மட்டும் இங்கு வந்த பார்வையாளர்கள் 4 கோடி. அதிக மக்கள் வந்து செல்வதில் அமெரிக்காவின் முதன்மை பூங்காவாக இது திகழ்கிறது.
இது மேல் மற்றும் மத்திய மன்ஹாட்டன் நகரில் அமைந்துள்ள புகழான ஒரு பூங்கா. இங்கு பார்த்து ரசிக்கும் இடங்கள் பல, நாம் விவரிப்பது அதில் சில.
வேனில் மாடம் கோட்டை(Belvedere Castle)
இத்தாலியில் ‘அழகான காட்சி’ என்ற அர்த்தம் கொண்ட இந்த கோட்டை, மத்திய பூங்காவில் நீர்நிலையை ஒட்டிய பாறைகளுக்கு மேல் சுவர்களும் கோபுரங்களுமாக கச்சிதமான எழிலோடு காட்சி தருகிறது. உள்ளே கண்காட்சியான அறைகளும் அதிகம்.
இது கோதிக் மற்றும் ரோம் கட்டட பாணியில் 1800-களின் பிற்பகுதியில் பிரடெரிக் லா ஓம்ஸ்டெட் மற்றும் கால்வெர்ட் வாக்ஸால் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டது. 1919-ல் இருந்து வானிலை நிலையமாக செயல்படுகிறது.