அமெரிக்காவில் தேர்வில் தேறாத 25 இந்திய மாணவர்களை பல்கலைக்கழக நிர்வாகம் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறுமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் பவுலிங் கிரீன் என்ற பகுதியில் மேற்கு கென்டக்கி பல்கலைக்கழகம் உள்ளது.
இதில் கடந்த ஜனவரி மாதம் 60 இந்திய மாணவர்கள் கம்ப்யூட்டர் அறிவியல் பட்டப்படிப்பில் சேர்ந்தனர்.
இந்நிலையில் முதல் பருவத் தேர்வில் எதிர்பார்த்த அளவு தரமான மதிப்பெண்களை 25 மாணவர்கள் எடுக்கவில்லை. இதனால் அவர்களை பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் கூறியுள்ளது.
அதேசமயம் மீதமுள்ள 35 மாணவர்கள் தொடர்ந்து படிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த 25 மாணவர்கள் நாடு திரும்புவதா அல்லது வேறு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பதா என்று பரிதாப நிலையில் உள்ளனர்.