ஸ்பெயினில் கடல் வாழ் உயிரிகள் காட்சி சாலையில் திமிங்கலம் ஒன்று தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
குறித்த காட்சியினை பார்வையாளர் ஒருவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
ஸ்பெயினின் டெனிரிஃப் தீவில் லோரோ பார்க்எனும் கடல்வாழ் உயிரிகள் காட்சிசாலை அமைந்துள்ளது. பிரபலமான இந்த மீன்காட்சி சாலைக்கு ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்வது வழக்கம்.
இங்கு 2010ம் ஆண்டு நெதர்லாந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மோர்கன் எனும் திமிங்கலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.மோர்கனுடன் மேலும் 5 திமிங்கலங்களும் கடல்வாழ் உயிரிகள் காட்சிசாலையில் பார்வையாளர்களை கவர்ந்து.
இந்நிலையில்,கடந்த சில தினங்கள் முன்பு,தனது நீர் தொட்டியில் இருந்து மோர்கன் வெளியே குதித்தெழுந்து கரைக்கு வந்துள்ளது. நீரில் மட்டுமே வாழக்கூடியதிமிங்கலம் கரைக்கு வந்ததால் பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பார்வையாளர்களில் சிலர் திமிங்கலத்தின் விசித்திர நடவடிக்கையை படம் பிடிக்கவும் செய்தனர்.
தண்ணீர் தொட்டிக்குள் அடைக்கப்பட்டு காட்சிபடுத்தப்பட்டிருந்த திமிங்கலமானது தனது சுதந்திரத்தை மீட்டெடுக்கும் நோக்கிலேயே இந்த செயலில் ஈடுபட்டதாக பார்வையாளர்களில் சிலர் கருத்து தெரிவித்தனர்.
சுதந்திரத்தை இழந்த விரக்தியில் நீரில் இருந்து வெளியேறி தற்கொலைக்கு முயன்றதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.