அமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் மர்ம பொருளை வீசிய பெண் அதிரடி கைது
அமெரிக்காவின் ஜனாதிபதி அலுவலகமான வெள்ளை மாளிகைக்குள் மர்ம பொருள் ஒன்றை வீசிய பெண்ணை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
ஜனாதிபதியான ஒபாமா Arlington தேசிய கல்லறையில் அஞ்சலி செலுத்திவிட்டு நேற்று பிற்பகல் நேரத்தில் வெள்ளை மாளிகைக்கு திரும்பியுள்ளார்.
ஒபாமா அலுவலகத்திற்குள் நுழைந்த அதே சமயம், வெளியே நின்றிருந்த பெண் ஒருவர் சுவரை தாண்டி மர்ம பொருள் ஒன்றை உள்ளே வீசியுள்ளார்.
இதனை கண்ட பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக பெண்ணை கைது செய்தது மட்டுமின்றி வெள்ளை மாளிகையை தற்காலிகமாக மூடினர்.
வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு அந்த மர்ம பொருளை கவனமாக சோதனை செய்யப்பட்டது.
ஆனால், அதில் ஆபத்தை ஏற்படுத்தும் எந்த பொருளும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் வெள்ளை மாளிகை பணிகள் இயல்பு நிலைக்கு திரும்பின.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், சில
தினங்களுக்கு முன்னர் வெள்ளை மாளிகைக்கு மேல் வண்ண பலூன்கள் பறந்து வெள்ளை மாளிகையின் மீதுவிழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.