யேமனில் அரசுப் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே இரு நாள்களாக நடைபெற்ற சண்டையில் 69 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
யேமனில் மரீப் மற்றும் ஷாப்வை மாகாணங்களுக்கு இடைப்பட்ட பல பகுதிகளை ஹூதி கிளர்ச்சியாளர்களிடமிருந்து அரசுப் படையினர் போராடி வென்றுள்ளனர்.
இந்தச் சண்டையில் இரு தரப்பிலும் 69 பேர் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சண்டையில் 22 அரசுப் படையினர் உயிரிழந்ததாகவும், 25 பேர் காயமடைந்தனர் என்று அந்தப் படையைச் சேர்ந்தவர்கள் கூறினர்.