அமெரிக்காவின் சின்சினாட்டி மாகாணத்தில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் கொரில்லாவின் இருப்பிடத்திற்குள் நுழைந்த சிறுவனை காப்பாற்ற பூங்கா ஊழியர் கொரில்லாவை சுட்டு வீழ்த்தினார். சிறுவனின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் 180 கிலோ எடையுள்ள கொரில்லா கொல்லப்பட்டதாக உயிரியல் பூங்காவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இச்சம்பவம் குறித்து உயிரியல் பூங்காவின் இயக்குநர் தானே மயனார்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நான்கு வயது சிறுவன் தடுப்பு வேலியை தாண்டி அகழிக்குள் விழுந்துவிட்டான். அகழிக்குள் விழுந்த அச்சிறுவனை ஹரம்பே என்ற அந்த கொரில்லா பிடித்து தன் பக்கமாக இழுத்துக்கொண்டது. இதனால், சிறுவனை காப்பாற்றும் நோக்கில் கொரில்லா சுட்டு வீழ்த்தப்பட்டது” என்றார்.இந்த அரியவகை கொரில்லாவை கொன்றது மிகவும் துயரத்திற்குரிய செயல் என்று தெரிவித்த அவர் கொரில்லாவை சுட வேண்டும் என்று எடுக்கப்பட்ட இந்த முடிவு கடினமாதாக இருந்தாலும் அது ஒரு சரியான முடிவுதான் என்றும் தெரிவித்துள்ளார்.