முதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இன்றாகும்.
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெறும் இந்த மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்கும் ஒரேயொரு தனியார் நிறுவனமாக வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனம் விளங்குகின்றது.
ஐக்கிய நாடுகள் உறுப்புரிமை பெற்ற 150 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 6000 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்பதுடன் 57 நாடுகளின் அரச தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட இடம்பெயர்ந்த மக்களுக்கு அவர்களின் வாழ்வாதாரங்களை சர்வதேச மனித நேய வழிமுறைக்கு அமைய சீரமைத்தல் அது தொடர்பிலான நிதியை உலக தலைமைகளிடம் திரட்டுதல் இந்த மாநாட்டின் நோக்கமாகும்.
இன்றைய நிறைவு நாள் நிகழ்வில் சர்வதேச பிரபலங்கள் மனித நேய செயற்பாட்டாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் கலந்து கொண்டனர்.
வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள குழுமப் பணிப்பாளர் ஷெவான் டெனியல் இந்த மாநாட்டில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.