இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து 7 பேர் பலி: பலர் மாயம்
சுமத்ரா: இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் உள்ள 2460 மீட்டர் உயரமான சினபங் எரிமலை நேற்று புகை சாம்பல் மற்றும் தீப்பிழம்புகளை கக்கியபடி பயங்கரமாக சீறியது. இந்த சீற்றத்தால் எரிமலையின் அடிவாரத்தில் உள்ள கிராமங்களை நோக்கி சூடான பாறைகளும், தீக்குழம்பும் தெறித்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் உயிருக்கு போராடி வருகின்றனர்.
மேலும் இதில் சிக்கி காணாமல்போன பலரை தேடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் தேசிய பேரிடர் மேலாண்மை தகவல் தெரிவித்துள்ளது.