கடல்மட்ட அதிகரிப்பால் 2050-ம் ஆண்டுக்குள் 4 கோடி இந்தியர்களுக்கு ஆபத்து: ஐ.நா. தகவல்
நியூயார்க், நகர்மயமாதல் உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் கடல்மட்டம் அதிகரிப்பால் 2050-ம் ஆண்டுக்குள் கடற்கரை நகரங்களில் உள்ள 4 கோடி இந்தியர்களுக்கு ஆபத்து உள்ளதாக ஐக்கிய நாட்டு சபை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
விரைவான நகர்மயமாதல் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக வருங்காலங்களில் கொல்கத்தா மற்றும் மும்பையில் கடலோர வெள்ளம் அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. பசிபிக் மற்றும் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பருவநிலை மாற்றம் காரணமாக மோசமான பாதிப்பு இருக்கும் என்று உலகளாவிய சுற்றுச்சூழல் கண்ணோட்டம் பிராந்திய கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2050-ம் ஆண்டுக்குள் கடல்மட்டம் உயர்வதினால் உலகளவில் அதிகமாக பாதிக்கப்பட கூடிய 10 நாடுகளில் 7 நாடுகள் ஆசிய பசிபிக் பிராந்தியத்திலே உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்து உள்ளது. பெரும்பாலான கடற்கரை பகுதியில் நகர்புற குடியேறுதல் வளர்ந்து வருகிறது. கடற்கரை நகரமயமாதல் இயற்கையான கடற்கரை அமைப்பை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. தீவிர காலநிலை நிகழ்வுகளை எதிர்கொள்வதில் இயற்கையான கடற்கரை அமைப்பு தோல்வி அடைகிறது. சீனா, இந்தியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் எதிர்காலத்தில் அதிகமான பாதிப்பை எதிர்க்கொண்டு உள்ளது. இந்தியாவில் மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்கள் இடம்பெற்று உள்ளன. சினாவில் குவாங்சௌ மற்றும் ஷாங்காய், வங்காளதேசத்தில் டாக்கா, மியான்மரில் யங்கூன், தாய்லாந்தில் பாங்காங், வியட்நாமில் ஹோ சி மிங்க் சிட்டி மற்றும் ஹய் போங் நகரங்கள் இடம்பெற்று உள்ளது. இந்நகரங்களில் பெரிய அளவிலான மக்கள் தொகை வெளிப்பாடு 2070-ல் கடலோர வெள்ளத்திற்கு வழிவகை செய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் சுற்று சூழல் சட்டமன்றம் அடுத்த வாரம் நைரோபியில் நடைபெற உள்ளநிலையில் இந்த அறிக்கையானது வெளியிடப்பட்டு உள்ளது, பசிபிக் மற்றும் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பருவநிலை மாற்றம் காரணமாக மோசமான பாதிப்பு இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.