கனடா : கனடாவின் ஆல்பர்டா மாகாணத்தில் மீண்டும் பரவி வரும் காட்டுத் தீயால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள எண்ணெய் வயலில் வேலை செய்யும் சுமார் 600 பேரை அங்கிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவ்வகையில் ஃபோர்ட் மெக்மர்ரிக்கு அருகில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்கள் வடக்கேயுள்ள எண்ணெய் மையங்களுக்கு அனுப்பப்படுவதாக அம்மாகாண முதல்வர் ரேச்சல் நோட்லி தெர்வித்துள்ளார்.
ஏற்கனவே ஃபோர்ட் மெக்மர்ரிக்கு வடக்கே உள்ள எண்ணெய் நிலையங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கானவர்கள் தேவைப்பட்டால் வெளியேற்றப்படலாம் என்று தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஃபோர்ட் மெக்மர்ரி நகரைச்சுற்றி காட்டுத் தீ பரவியதால் அங்கிருந்து 80,000க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.