ரஷ்யாவில் சோச்சி என்னும் இடத்தில் நடக்கவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக ஒலிம்பிக் பந்தத்தை ஏற்றிய ராக்கட் ஒன்று கஷகஸ்தானின் பைகோனூர் என்னும் இடத்தில் இருந்து ஏவப்பட்டுள்ளது.
சனிக்கிழமையன்று இரு ரஷ்ய விண்வெளி வீரர்கள் இதனை எடுத்துக்கொண்டு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வான் வெளியில் பவனி வருவார்கள்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தப் பந்தத்தில் தீ ஏற்றப்பட்டிருக்காது.
பின்னர் அது பூமிக்கு கொண்டுவரப்பட்டு அடுத்த வருடம் பெப்ரவரியில், சோச்சியில், ஒலிம்பிக் போட்டிகளின்போது ஒலிம்பிக் ஜோதியை ஏற்ற பயன்படுத்தப்படும்.
தம்மை ஒரு பலம் மிக்க, நவீன நாடாக மீண்டும் உருவகப்படுத்தும் நடவடிக்கையாகவே ரஷ்யா இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளதாக பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறியுள்ளார்