சிங்கப்பூரின் தேசத்தந்தை என்று வர்ணிக்கப்படும் லி குவான் யூ காலமானதாக சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் சற்று முன்னர் அறிவித்திருக்கிறது. இறக்கும் போது அவருக்கு வயது 91.
ஒரு காலத்தில் சின்னஞ்சிறு கடற்கரை நகரமாக பார்க்கப்பட்ட சிங்கப்பூரை, உலகின் முக்கிய செல்வந்த மையமாக மாற்றிக்காட்டியவர் லீ என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரின் முதல் பிரதமராக பதவியேற்ற லீ 31 ஆண்டுகள் பதவியில் இருந்தார்.
சிங்கப்பூரை செல்வந்த மையமாக மாற்றியதற்காக அவர் பரவலாக பாராட்டப்பட்டாலும் அவரது சர்வாதிகார ஆட்சிமுறை மீது விமர்சனங்களும் வைக்கப்பட்டன.
சிங்கப்பூர் பொதுமருத்துவ மனையில் உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை 3.18 மணிக்கு அவரது உயிர் அமைதியான முறையில் பிரிந்ததாக சிங்கப்பூர் பிதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.