சமூக வலைத்தளமான பேஸ்புக், நிர்வாகத்திற்கான கருவி என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் விடுத்துள்ளார்.
நாட்டின் நிர்வாகத்திற்கு மக்களுடனான நேரடித் தொடர்பு முக்கியமானது என பேஸ்புக்கின் சிரேஷ்ட நடவடிக்கை அதிகாரியான சேர்லி சன்ட்பேர்க்கிடம் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பேஸ்புக் சமூக வலைத்தளம் தொடர்பில் பயன்மிக்க கலந்துரையாடலை சேர்லி சன்ட்பேர்க் உடன் நடத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பேஸ்புக் ஊடாக இந்தியாவிற்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது தொடர்பாகவும் சன்ட்பேரக் உடன் கலந்துரையாடியதாக நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மிகவும் பிரபலமான சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் சிரேஷ்ட நடவடிக்கை அதிகாரியாக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக சேர்லி சன்ட்பேர்க் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.