ஈபிள் கோபுரத்துக்கு முன்னால் நேற்றுமுன்தினம் நடைபெற்ற விசேட கோலூன்றி பாய்தல் கண்காட்சி நிகழ்வொன்றில் பிரான்ஸை சேர்ந்த ரெனோட் லவிலெனி நேற்று பங்குபற்றினார்.
அவர், கோலூன்றிப் பாய்தலில் தற்போதைய உலக சம்பியன் ஆவார்.
மனிதர்களால் நிர்மாணிக்கப்பட்ட உலகின் மிக உயரமான நிர்மாணமாக ஒரு காலத்தில் விளங்கியதே இந்த ஈபிள் கோபுரம்.
அக்கோபுரத்தின் முன்னிலையில், உலக வரலாற்றில் மிக அதிக உயரம் பாய்ந்த நபரான ரொனால்ட் லவிலெனி கோலூன்றி பாய்தலில் ஈடுபட்டமை அபூர்வமான ஒரு நிகழ்வாக இருந்தது.
கோலூன்றி பாய்தலில் பல்வேறு சாதனைகளை படைத்த முன்னாள் உலக சாதனையாளரான ரஷ்யாவின் சேர்ஜி புப்காவும் இந்நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டமை குறிப்பிடத்கதக்கது.