இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஐ.நா. குழுவுக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட மூவர் குழுவுக்கு அமெரிக்கா வரவேற்புத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதிப் பேச்சாளர் மாரி ஹார்ப் தெரிவிக்கையில்:
நல்லாட்சி, மனித உரிமை விவகாரம், நல்லிணக்கம் மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் ஆகிய நடவடிக்கைகள் தொடர்பில் நிலுவையாக உள்ள பிரச்சினைகளுக்கு இலங்கை அரசாங்கம் காத்திரமானதும் ஸ்திரமானதுமான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் ஐ.நா. விசாரணைக்கு இலங்கை பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
விசாரணைக்கான ஆலோசனைக்குழுவில் திறமையான மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது வரவேற்கத்தக்க விடயம் என்றும் அவர் தெரிவித்தார்.