மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து பாஜக தனித்து ஆட்சி அமைக்கும் சூழலும் உருவாகியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் பாஜகவின் இந்த அபார வெற்றி குறித்து அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரான மோடி டுவிட்டர் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து கூறியுள்ள அவர் இந்தியா வென்றது என பாஜகவின் வெற்றியை வருணித்துள்ளார்.
முன்னதாக தேர்தலில் வாரணாசி மற்றும் வதோதரா தொகுதியில் வெற்றி வாகை சூடிய மோடி தனது தாயாரிடம் ஆசி பெற்றார். மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.
21-ம் திகதி நாட்டின் 14-வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார். பாரதிய ஜனதா சார்பில் வாஜ்பாய்க்குப் பின் மோடி பிரதமர் பதவியை ஏற்க உள்ளார். குஜராத் மாநிலத்தில் இருந்து 2-வதாக பிரதமர் பொறுப்பை மோடி ஏற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.