நேற்று பங்களாதேஷில் இடம்பெற்ற படகு விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 250 - 300 பயணிகளுடன் தலைநகர் டாக்காவிலிருந்து 27 கிலோமீற்றர் தொலைவிலுள்ள முன்ஷிகஞ்ச் மாநிலத்திலுள்ள ஆற்றில் பயணித்த எம்.வி.மிராஜ்ச் 4 படகு, சீரற்ற காலநிலையினால் விபத்துக்குள்ளானதில் சுமார் 200 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
குறித்த படகு முன்ஷிகஞ்ச் மாவட்டத்தில் ரசூல்பூர் கிராமம் அருகே மேக்னா ஆற்றில் சென்றுகொண்டிருந்தபோது மோசமான வானிலை காரணமாக திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது. மீட்பு பணிகள் தொடர்கின்றன.