சார்ஸ் வைரஸ் கிருமிகள் கொண்ட குப்பிகள் மாயம்

பிரான்ஸ் நாட்டின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் சேமித்து வைத்திருந்த 2300 சார்ஸ் வைரஸ் கிருமிகள் கொண்ட குப்பிகள் காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் இது குறித்து கூறுகையில், “பாஸ்டர் ஆராய்ச்சி நிறுவனத்தின் கோப்புக்காக சேமிக்கப்பட்டு வைத்திருந்த 2300 சார்ஸ் வைரஸ் கிருமிகளைக் கொண்ட 29 குப்பிகள் எங்கள் நிறுவனக் கிடங்கிலிருந்து காணாமல் போய்விட்டது. மருந்து மற்றும் சுகாதார பாதுகாப்புத்துறை ஆணையம் கடந்த நான்கு நாட்களாக குப்பிகளைத் தேடும் பணியை மேற்கொண்டது. எனினும், குப்பிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை” என்று கூறியுள்ளது.

இருப்பினும், காணாமற்போன குப்பிகளில் இருந்த சார்ஸ் வைரஸ் கிருமிகள் காலாவதி ஆனவை என்றும், அந்த கிருமிகளால் பாதிப்பு ஏதும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் பாஸ்டர் ஆராய்ச்சி நிறுவனம், 1980களில் எச்.ஐ.வி கிருமிகளைத் தனிமைப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

You may also like ...

இலங்கையுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூஸிலாந்து கைப்பற்றியது

இலங்கை அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ந

ஆப்பிளின் 5G தொழில்நுட்பத்தை கொண்ட ஐபோன் எப்போது அறிமுகமாகின்றது?

ஆப்பிள் நிறுவனமானது வருடம் தோறும் புதிய தொழில்நுட்

புதிய தொகுப்புகள்