நரமாமிசம் உண்டவர் கைது

நூறுக்கும் அதிகமான சடலங்களை அதன் சமாதியிலிருந்து திருடி நரமாமிசம் உண்டதாக பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர்,பாகிஸ்தான் மாநிலம் பஞ்சாப் மாகாணத்தில் பாக்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது ஆரிப் அலி ஆவார். வயதான இவர் ஏற்கனவே சுமார் 100க்கும் அதிகமான சடலங்களை சமைத்துச் சாப்பிட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு அவருடைய சகோதரருடன் கைது செய்யப்பட்டவர் எனபது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற அவர்கள் கடந்தாண்டு தான் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில், டந்த சில நாட்களாக ஆரிப் அலி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தார் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து ஆரிப் அலி வீட்டில் பஞ்சாப்  பொலிஸார் நடத்திய சோதனையில் சிறு குழந்தையின் பிணம் ஒன்று அங்கு கண்டுபிடிக்கப்பட்டது. கால்பகுதி வெட்டப்பட்டு இருந்த அந்த சடலத்தின் தலை வீட்டின் வேறொரு பகுதியில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து பஞ்சாப் பொலிஸார் நேற்று (14/04) ஆரிப் அலியை கைது செய்தனர்.

அவர், இறந்த சிறு வயது குழந்தையை புதைத்த இடத்தில் இருந்து தோண்டி எடுத்து அதன் கால் பகுதியை வெட்டி எடுத்து சமைத்து உண்டதாக பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
நரமாமிசம் உண்பவர்களுக்கு எதிராக பாகிஸ்தானில் நேரடிச் சட்டம் ஏதும் இல்லாத காரணத்தால், ஆரிப் அலி மீது சமாதியின் புனிதத்தைக் கெடுத்ததாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது எனபது குறிப்பிடத்தக்கது.

You may also like ...

பிரேசில் முன்னாள் ஜனாதிபதி கைது

ஊழல் வழக்கில் பிரேசில் முன்னாள் ஜனாதிபதி மிச்சல் ட

முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கை அந்நாட்

புதிய தொகுப்புகள்