மற்றுமொரு சூடான செய்தி, எல்லோராலும் பரவலாகப் பேசப் பட்டுக் கொண்டிருக்கும் MH -370 விமானம், டியாகோ கார்சியா தீவில் உள்ள தனது இராணுவ தளத்தில் தரை இறங்கியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியை அமெரிக்கா மறுத்துள்ளது.
இன்னும் என்ன நிலை என்று புரியாத புதிராய் தேடல் ஆரம்பமாகிறது, கூடவே அதிர்ச்சித் தகவல்களும் வெளியாகிய வண்ணமே காணப்படுகின்றது. இது குறித்த செய்தியை மலேசியாவில் உள்ள அமெரிக்க தூதரகமும் மறுத்துள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.