ஹிலாரி கிளின்டன் மீது பாதணி வீச்சு

அமெரிக்காவின் முன்ளாள் வெளிவிவகார செயலாளரும் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனின் மனைவியுமான ஹிலாரி கிளின்டனை நோக்கி பெண்ணொருவர் பாதணியொன்றை வீசியுள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் வியாழனன்று (10/04/2014) நடந்த நிகழ்வொன்றில் ஹிலாரி கிளின்டன் மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்தபோதே இது நிகழ்ந்துள்ளது. தன்னை நோக்கி ஏதொ பொருள் வருதை அவதானித்த ஹிலாரி கிளின்டன் உடனடியாக குணிந்துகொண்டார். அப்பாதணி அவர் மீது படாமல் கடந்து சென்றது.

அதனை போருட்படத்தாத அவர் அப்பாதணி வீச்சு குறித்து நகைச்சுவையாக பேசி தனது உரையைத் தொடர்ந்தார். ஹிலாரி மீது பாதணி வீசிய பெண் அங்கிருந்து மண்டபத்திலிருந்து அழைத்துச்செல்லப்பட்டதுடன் பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 

You may also like ...

நியூஸிலாந்தில் தாக்குதல் நடத்திய நபர் மீது 50 கொலை குற்றச்சாட்டுகள்

நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு தொடர்பாக கைது செய்யப

அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் சவுதி மீது கடுமையான தடைகளை விதிக்குமாறு வலியுற

சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோஜி (Jamal Khashoggi) கா

புதிய தொகுப்புகள்