கலகத்தில் ஈடுபட்ட 150 வீரர்களுக்கு மரண தண்டனை

வங்கதேத்தில் கடந்த 2009ம் ஆண்டு திடீர் கலகத்தில் ஈடுபட்டு ராணுவ அதிகாரிகள் உட்பட 74 பேரை கொன்ற 150 வீரர்களுக்கு வங்கதேச நீதிமன்றம் மரண தண்டனை அளித்துள்ளது. வங்கதேசத்தின் துணை ராணுவப் படை ‘வங்கதேச ரைபிள்ஸ்(பி.டி.ஆர்).

இந்தப் படைப்பிரிவின் ஆண்டு விழா கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி அன்று தலைநகர் தாகாவில் உள்ள தலைமையகத்தில் நடந்தது. இந்த விழாவை பிரதமர் ஷேக் ஹசினா தொடங்கி வைத்தார்.

2ம் நாளன்று தர்பார் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பி.டிஆர் டைரக்டர் ஜெனரல் ஷகில் அகமது உரையாற்றி கொண்டிருந்தார். அப்போது அந்தப்படைப்பிரிவின் 823 வீரர்களில் 500 பேர் திடீர் கலகத்தில் இறங்கினர். ஷகில் அகமது உட்பட பல அதிகாரிகளை சிறை பிடித்தனர். ஷகில் அகமது வீட்டுக்குள் புகுந்து அவரது மனைவியை சுட்டுக் கொன்று அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்தனர்.

வங்கதேச ரைபிள்ஸ் படைப்பிரிவுக்கு ராணுவ அதிகாரிகளை நியமிப்பதை தடுக்க வேண்டும் எனவும், பி.டி.ஆரில் பணியாற்றுபவர்களுக்கு பதவி உயர்வு வழங்கி அவர்களை தலைமை அதிகாரிகளாக நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ராணுவ உயர் அதிகாரிகள் பலர் தங்கள் சம்பள பணத்தை தராமல் கொள்ளையடித்ததாகவும் குற்றம் சுமத்தினர்.

இரண்டு நாட்கள் இவர்கள் மேற்கொண்ட கலகத்தில், ராணுவ அதிகாரிகள் உட்பட 74 பேர் கொல்லப்பட்டனர். இதனால் வங்கதேச ரைபிள்ஸ் தலைமையகத்தை ராணுவமும், அதிரடிப்படையும் சுற்றி வளைத்தது. அரசு தரப்புடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப்பின் வங்கதேச ரைபிள்ஸ் படைப்பிரிவினர் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடைந்தனர். கொலை, கொள்ளையில் ஈடுபட்டவர்களை தவிர மற்றவர்களுக்கு பொது மன்னிப்பு அளிப்பதாக பிரதமர் ஷேக் ஹசினா அறிவித்தார்.

இந்த கலகம் தொடர்பான வழக்கில் 500 வீரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந் தது. இந்த வழக்கில் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது. கலகத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட 350 வீரர்களுக்கு சிறைதண்டனையும், ராணுவ அதிகாரிகளை கொலை செய்த குற்றச் சாட்டில் 150 வீரர்களுக்கு மரண தண்டனையும் விதித்து வங்கதேச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

You may also like ...

இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு சங்கக்காரவின் ஆலோசனை!

சர்வதேச கிரக்கெட் விளையாட்டின் ஊழல் சம்பவங்களில் 4

இந்தியாவில் 150 முஸ்லிம் கல்வி நிறுவனங்களில் நிக்காப், புர்கா அணிய தடை!

இலங்கையில் மேற்கொண்டு தாக்குதல்களை தடுக்கும் விதமா

புதிய தொகுப்புகள்