பாதுகாப்பு பாண்டு திட்டம் கைவிட்டது இங்கிலாந்து

குறுகிய கால விசாவில் வந்து விசா காலம் முடிந்தபின்னரும் தங்கிவிடும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கத்தில் 3,000 பவுண்டு''விசா பாதுகாப்பு பாண்டு'' என்ற திட்டத்தை அமல்படுத்த இங்கிலாந்து உள்துறை அமை ச்சகம் முடிவு செய்தது. இதற்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, இதை கைவிட்டுவிட்டதாக இங்கிலாந்து அரசு தற்போது அறிவித்துள்ளது.

சில நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கிலாந்துக்கு குறுகிய கால விசாவில் வருகின்றனர். விசா காலம் முடிந்தும் அவர்களது நாடுகளுக்கு திரும்பிச் செல்லாமல் இங்கேயே தங்கிவிடுகின்றனர். அப்படி தங்குவோர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகம் என்று கண்டுபிடித்து அந்த நாடுகளில் இருந்து வருவோரின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கத்தில் விசா பாதுகாப்பு பாண்டு என்ற ஒரு திட்டத்தை நவம்பர் மாதம் முதல் அமல்படுத்தப் போவதாக இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் தெரஸா மே கடந்த ஜூனில்  அறிவித்தார்.

இங்கிலாந்துக்கு வரும் குறிப்பிட்ட நாடு களைச் சேர்ந்த வெளிநாட்டினர் 3,000 பவுண்டு ரொக்கமாக செலுத்த வேண்டும். விசா காலம் முடிந்தும் இங்கிலாந்தில் தங்கியிருப் பது தெரியவந்தால் அந்த தொகை முடக்கப்பட்டு விடும். இதற்கான நாடுகள் பட்டியலில் இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா ஆகியவையும் இடம்பெற்றிருந்தன. இந்த திட்டத்துக்கு இந்தியா உள்பட பல நாடுகள்  எதிர்ப்பு தெரிவித்தன.

இதையடுத்து, விசா பாதுகாப்பு பாண்டு திட்டம் குறித்து முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று இங்கிலாந்து வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஹக்கோ ஸ்வையர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த முடிவுக்கு துணை பிரதமர் நிக் கிளக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து இங்கிலாந்து பின்வாங்கியதாகத் தெரிகிறது. தற்போது, விசா பாதுகாப்பு பாண்டு திட்டம் கைவிடப்பட்டதாக வெளியான தகவலை இங்கிலாந்து உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.

You may also like ...

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் பதவி நீக்கம்!

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து ஜ

முதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி!

உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இங்கிலாந்து மற்றும் நி

புதிய தொகுப்புகள்