பாங்காக்கில் நடைபெற்ற உலக திருநங்கையர் அழகு ராணி போட்டியில், பிரேசில் நாட்டைச் சேர்ந்த மார்கெலோ ஓஹியா வெற்றி பெற்றார்.
உலக திருநங்கையர் அழகிப் போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி. தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில், கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. 9ஆம் ஆண்டாக நடைபெறும் இப்போட்டியில் அமெரிக்கா, பிரேசில், ஜப்பான், தென் கொரியா ஆகிய 16 நாடுகளை சேர்ந்த திருநங்கைகள் இந்த போட்டியில் பங்கேற்றனர்.
அவர்களது உடல் மற்றும் முக வசீகரம், அறிவுக் கூர்மை ஆகியவற்றின் அடிப்படையில் பட்டத்துக்குரியவர் தேர்வு செய்யப்பட்டார்.
இதில் பிரேசில் நாட்டை சேர்ந்த 18வயதுடைய திருநங்கை மார்கெலோ ஓஹியா, அழகு ராணியாக முடிசூட்டப்பட்டார்.
10 ஆயிரம் டாலர் ரொக்கம் மற்றும் தாய்லாந்தின் உல்லாச நகரமான பட்டயாவில் உள்ள விடுதியில் ஓராண்டு வரை இலவசமாக தங்கும் அனுமதி போன்றவை அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது.