தாலிபன் தலைவர் கொல்லப்பட்டார்

அமெரிக்க படையினரின் ஏவுகணைத் தாக்குதலில்,பாகிஸ்தானின் தெஹ்ரீக்-இ-தாலிபன் தலைவர் ஹகிமுல்லா மெசூத் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் தண்டே தர்பா கேல் என்ற இடத்தில்,அமெரிக்கப் படையினர் இரண்டு ஏவுகணைகள் மூலம் வெள்ளிக்கிழமை தாக்கியதில் அவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளையில், இந்தச் செய்தியை இன்னும் உறுதி செய்யவில்லை என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வடக்கு வாஸிரிஸ்தானின் தண்டே தர்பாகேல் பகுதியில் தொழுகைக்காக புறப்பட்டபோது, மெசூத் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதில், அவரது நெருங்கிய உதவியாளர் அப்துல்லா பாஹர் மெசூத் உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்தனர்; இருவர் காயம் அடைந்தனர் என்று தனது உயர் மட்ட அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பு தகவல் தெரிவித்ததாக, பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் டான் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

You may also like ...

இலங்கை டெஸ்ட் தலைவர் திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை!

வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை டெஸ

இலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்

இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ

புதிய தொகுப்புகள்