நைகர் பாலை வனத்தில் உணவு மற்றும் நீரின்றிப் பலர் பலி

அல்ஜீரியாவில் அகதி அந்தஸ்துக் கோரவென சஹாரா பாலை வனத்தினூடாக 60 பயணிகளுடன் இரு வாகனங்களில் நைஜீரியாவில் இருந்து புறப்பட்ட அந்நாட்டுக் குடி மக்கள் வரும் வழியில் வாகனங்கள் பழுதானதால் பாலை வனத்தின் நடுவில் சிக்கி உணவும், நீரும் கிடைக்காமல் பலியாகியிருக்கலாம் என அஞ்சப் படுகின்றது.

திங்கட்கிழமை உள்ளூர் அதிகாரிகள் இத்தகவலைத் தெரிவித்த போதும் போலிஸ் தரப்பில் இந்த வாகனத்தில் பயணித்த 19 பேர் உயிர் பிழைத்திருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பல சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட பயணித்த இந்த அகதிகள் குழு ஆக்டோபர் மத்தியில் தாகத்தால் உயிரிழந்திருக்கலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதில் பலர் காணாமலும் போயுள்ளனர். இதில் தாகத்தால் இறந்தவர்களின் 35 சடலங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. உயிர் பிழைத்த 19 பேரும் ஆர்லிட் நகருக்கு வந்தடைந்திருப்பதாக போலிசார் தெரிவித்துள்ளனர். இவர்கள் பல நாட்களாக தண்ணீரைத் தேடிக் கொண்டு பல நாட்களாக அலைந்து திரிந்து அதிர்ஷ்டவசமாக இப்பிரதேசத்தை அடைந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

You may also like ...

குழந்தைகளுக்கு நிகழும் நீரிழிவு நோயின் வகைகள் மற்றும் அறிகுறிகள்!

சர்க்கரை நோய் என்பது ஒரு குறைபாடு. இதில் உடலில் உற

கீரைகள் மற்றும் வெந்தயத்தின் பயன்கள்!

கீரைகள் • கீரைகள், காய்கறிகள் உடல் வளர்ச்சிக்கும்

புதிய தொகுப்புகள்