அல்கொய்தாவின் அடுத்த இலக்கு இந்தியா

அல் கொய்தாவின் முக்கிய தலைவர்களை வீழ்த்திவிட்டதால் அவை செயலிழ்ந்து விட்டது, மேலும் அதன் இலக்கு இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் நிருவனங்களையே அல்கொய்தாக இலக்காக வைத்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

டெல்லி, மும்பை போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களில் அல் கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

தீவிரவாத அமைப்பான அல் கொய்தா பாகிஸ்தானில் தங்களது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளித்துவருகிறது. அத்துடன் அங்கு நிலையற்ற அரசியல் சூழலை உருவாக்கவும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.

பயங்கரவாத அமைப்புக்கள் குறித்து பல்வேறு ஆய்வுகளை செய்துவரும் ஸடீபன் டங்கெல், அல்-கொய்தா, லஸ்கர் இ தொய்பா ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

இந்நிலையில், அல்-கொய்தா அமைப்பு குறித்து அவர் கூறுகையில், தற்போதைய சூழ்நிலையில், வலுவிழந்துள்ள அந்த அமைப்பு, இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது என்று எச்சரித்துள்ளார்.

You may also like ...

இந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி இன்று தொடரும்!

மழை காரணமாக நேற்று இடைநிறுத்தப்பட்ட இந்தியா - நியூ

அமெரிக்க ஜனாதிபதியின் அடுத்த ஆண்டுத் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனட்ல் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனா

புதிய தொகுப்புகள்