×

Error

There was a problem loading image piles-225x170.jpg

பாகிஸ்தான் பிரச்சனையில் தலையிட முடியாது அமெரிக்கா தெரிவிப்பு

பாகிஸ்தான் பிரச்சனையில் தலையிட முடியாது என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. காஷ்மீர் தொடர்பான தனது கொள்கையில் மாற்றம் இல்லை என்று தெரிவித்துள்ள ஒபாமா நிர்வாகம், இதில் தலையிடுமாறு வேண்டிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.

4 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நவாஸ் ஷெரிப்பின் இந்த கோரிக்கை, காஷ்மீர் பற்றிய அமெரிக்காவின் கொள்கையில் மாற்றம் ஊதும் இல்லாது நிலையில் ஏற்கதக்க அல்ல என வெள்ளைமாளிகை அதிகாரிகள் வாஷிங்கடனில் தெரிவித்தனர்.

23ந் தேதி தம்மை சந்திக்க உள்ள நவாஸ் ஷெரிப்பிடம் அதிபர் ஒபாமா இதை திட்டவட்டமாக தெரிவிப்பார் என்றும் அவர்கள் கூறினர். இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், காஷ்மீர் விவகாரம் இந்தியா - பாகிஸ்தான் என்ற இருநாடுகள் தொடர்பானது என்று கூறியுள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே போடப்பட்ட சிம்லா ஒப்பந்தத்தில், காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண ஒரு நாட்டை அனுமதிக்க முடியாது என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளதை சல்மான் குர்ஷித் சுட்டிக்காட்டியுள்ளார். போர் ஒப்பந்தம் மீறி, பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவது வருத்தம் அளிப்பதாகவும் அவர் கூறினார்.

You may also like ...

World Cup 2019 - பங்களாதேஷ் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி!

பங்களாதேஷ் அணியை 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்

இலங்கை – பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு 19 வ

Also Viewed !

புதிய தொகுப்புகள்