சிரியாவில் வெடிகுண்டுத் தாக்குதல்

சிரியாவின் ஹாமா நகரில் கார் மூலம் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். 1.5 டன் எடையுள்ள வெடிப்பொருள் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தாக்குதல் நிகழ்த்தப்பட்ட பகுதியில் தீயணைப்பு துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ சோதனைச் சாவடியை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பெரும்பாலும் அப்பாவி பொதுமக்களே உயிரிழந்ததாக சிரியாவின் மனித உரிமைகள் கழகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதே போல் சிரியாவின் டமாஸ்கஸ் அருகே உள்ள டாமிகோ ராணுவ சோதனைச் சாவடியை குறிவைத்து மற்றொரு கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முகமூடி அணிந்த தீவிரவாதிகள் ராணுவத்தினருடன் துப்பாக்கிச் சண்டையிலும் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You may also like ...

நியூஸிலாந்தில் தாக்குதல் நடத்திய நபர் மீது 50 கொலை குற்றச்சாட்டுகள்

நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு தொடர்பாக கைது செய்யப

சிரியாவில் ஐஎஸ் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து பிரதேசங்களும் மீட்பு

சிரியாவில் ஐஎஸ் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து பிர

புதிய தொகுப்புகள்