ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ. எஸ்.ஐ.எஸ் எனப்படும் ஆயுததாரிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்கா வான்தாக்குதல்களை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில், ஆளில்லா விமானங்கள் மூலமும் கடற்படையினரின் போர் விமானங்கள் மூலமாகவும் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
கிளர்ச்சியாளர்கள் மீது வான்தாக்குதல்களை நடத்துவதற்கு அமெரிக்க ஜனாபதிபதி பராக் ஒபாமா நேற்று முன்தினம் அனுமதி வழங்கியிருந்தார்.
இதனயைடுத்து நேற்று முதல் ஈர்பில் நகர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதுடன் அங்குள்ள மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதல்களில் ஆயுததாரிகள் சிலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பென்டகன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2011 ஆம் ஆண்டில் ஈராக்கிலிருந்து’ அமெரிக்க துருப்பினர் வெளியேறியதன் பின்னர் இரண்டாவது முறையாக அங்கு தாக்குதல்கள் நடத்தப்படுகின்றமையும் குறிப்பிடதக்கது.