தற்போது காசாவில் ஏற்பட்டுள்ள அமைதி நிலமையை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்ளுமாறு, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி பாராக் ஒபாமா கோரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையில் கடந்த ஒரு மாதகாலமாக கடுமையான தாக்குதல்கள் இடம்பெற்றது.
இதனால் சுமார் ஆயிரத்து 800 பேருக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
இந்த நிலையில், நேற்றைய தினம் அங்கு யுத்த நிறுத்தம் பிரகடனப்படுத்தப்பட்டது.
அப்போதே, இந்த அமைதி நிலமையை தொடர்ந்தும் பாதுகாக்குமாறு ஒபாமா கோரிக்கை விடுத்துள்ளார்.