கிழக்கு சீனக் கடலுக்கு மேலான வான்பரப்பில் வான் பாதுகாப்பு அடையாளப்படுத்தல் வலையத்தை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளது.
சர்வதேச வான்பரப்பில் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என அமெரிக்கா, சீனாவை எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனினும் இதனை தாங்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தை சீனா அமுலாக்க கூடாது என்றும், அமெரிக்காவின் ராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஜேன் சாகி தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் சர்வதேச வான்பரப்பில் பதற்ற சூழ்நிலை ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதே குற்றச்சாட்டை ஜப்பான் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.