இந்தியாவின் இராமேஸ்வரத்தில் இருந்து அரியவகை கோவேறு குதிரைகள் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்தப்படுவதாக தமிழக மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தனுஷ்கோடி முதல் பாம்பன் வரையான கரையோர பகுதிகளில் கோவேறு குதிரைகள் அதிகளவில் வசிப்பதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த குதிரைகளின் குட்டிகளை பிடித்து சிலர் படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்துவதாக தமிழக மீனவர்கள் கூறியுள்ளனர்.
இந்த சட்டவிரோத நடவடிக்கையை தடுப்பதற்கு தமிழக வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.