மாயமான மலேசிய விமானம் தொடர்பான தகவல்களை வெளிப்படையான அறிக்கையாக வெளியிடவுள்ளதாக மலேசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மலேசிய விமானம் கடந்த மார்ச் 8 ஆம் திகதி காணாமற் போனமை தொடர்பில் விமானத்தில் சென்ற பயணிகளின் உறவினர்கள் மேற்கொண்ட முற்றுகை போராட்டத்தை அடுத்து மலேசிய அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுவரை எந்தவித தகவல்களையும் வெளியிடாத மலேசிய அரசாங்கத்தை கண்டித்து இன்று காலை பெய்ஜிங்கில் உள்ள மலேசிய தூதரகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள், மலேசிய பிரதமர் நிஜாப் ரஸாக் அரசாங்கத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையிடம் சமர்பிக்கப்பட உள்ள மாயமான விமானம் தொடர்பான அறிக்கை அடுத்த வாரத்தில் பொது மக்களுக்கக வெளியிடப்படும் என பிரதமர் நிஜாப் ரஸாக் தெரிவித்துள்ளார்.