50 இலங்கை ஏற்றுமதியாளர்கள் துபாயில் இடம்பெற்ற உணவுப்பொருள் கண்காட்சியில் பங்கேற்பு

இலங்கையை சேர்ந்த பெருமளவிலான உணவுப்பொருட்கள் ஏற்றுமதி செய்யும் சுமார் 50 கம்பனிகள் துபாயில் இடம்பெற்ற கல்ப்(f) பூட் 2015 சர்வதேஷ வர்த்தக கண்காட்சியில் பங்கு பற்றியதோடு இலங்கையின் பிரதான ஏற்றுமதி பொருட்களான தேயிலை , ஏலம், கறாம்பு  , மிளகு , தேங்காய் எண்ணை , மரக்கறி , பழவகை , பிஸ்கட் , குளிர்பாணம் மற்றும் பதனிடப்பட்ட உணவுப்பொருட்கள் கண்காட்சியில் வைத்து இருந்தனர்.

பெப்ரவரி ௦8 முதல் 12 வரை இடம்பெற்ற இந்த மாபெரும் வணிக கண்காட்சியை துபாயில் உள்ள இலங்கை பிரதித் தூதவராலயம் இலங்கை வர்த்தக  கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களின் அமைச்சின் கீழ் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் இலங்கை தேயிலை சபையுடன் இணைந்து ஏற்பாடு செய்து இருந்தது.

இலங்கையில் இருந்து துபாய் வந்த ஏற்றுமதியாளர்களை வரவேற்கும் முகமாக இலங்கை பிரதித்துதுவராலயம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள “ரசல் கைமா “ முதலீட்டு அபிவிருத்தி சபையுடன் இணைந்து வியாபார தொடர்பாடல் இராப்போசன நிகழ்வு ஒன்றினையும் ஏற்பாடு செய்து இருந்தது.

இன் நிகழ்வில் உரையாற்றிய துபாயில் உள்ள இலங்கை பிரதி தூதுவர் M.M. அப்துல் றஹீம் இலங்கையின் ஏற்றுமதி பொருட்களுக்கு இருக்கும் சந்தை வாய்ப்புக்களை எடுத்துரைத்ததோடு பெருமளவிலான இலங்கை கம்பனிகள் இம்முறை கல்ப்(f) பூட் கண்காட்சியில் பங்கேற்பது இலங்கை வர்த்தக கைத்தொழில் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட  ஊக்குவிப்பு நடவடிக்கைகளே பெருமளவு பங்களிப்பு செய்துள்ளன எனவும் எடுத்துரைத்தார் .

“ரசல் கைமா “ முதலீட்டு சபையின் பிரதான அதிகாரி வசீம் கான் இலங்கை கம்பனிகள் எவ்வாறு ஐக்கிய அரபு இராச்சியத்தில் தனது வியாபாரத்தினை விஸ்தரிக்க முடியும்  என விளக்கவுரை நிகழ்த்தினார். சுமார் 120 க்கும் மேற்பட்டோர் கலந்து  கொண்ட இன் நிகழ்வில் எயார் அரேபியாவின் ஆதரவுடன் ஷார்ஜாவில் இருந்து கொழும்புக்கான இரண்டு விமானச் சீட்டுக்கள் குழுக்கள்  முறையில் தெரிவு செய்யப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு அளிக்கப்பட்டது.

You may also like ...

மெத்திவ்ஸின் சதத்துடன் 264 ஓட்டங்களைப் பெற்றது இலங்கை அணி!

இன்று இடம்பெறுகின்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்

இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்!

உலக கிண்ண கிரிக்கட் தொடரில் லீட்ஸ் மைதானத்தில் இன்

புதிய தொகுப்புகள்