கடந்த புதன்கிழமை தென்கொரியாவில் மூழ்கிய கப்பலிலிருந்து மேலும் 13 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதுவரை கப்பலில் இருந்து 46 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 476 பேருடன் கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து 174 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட போதிலும் மேலும் 256 பேரின் நிலை குறித்து இன்னும் தகவல்கள் இல்லை.
இந்நிலையில் கப்பலின் மீட்பு பணிகள் நிறைவடைய இரண்டு மாதகாலங்கள் எடுக்கலாம் என தென் கொரியா தெரிவித்துள்ளது . சீரற்ற வானிலை மற்றும் கடல் கொந்தளிப்பினால் மீட்பு பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டிருந்த போதிலும் நூற்றுக்கணக்கான சுழியோடிகள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சடலங்களை அடையாளங்காண்பதற்காக பயணிகளின் உறவினர்கள் தமது டி என் ஏ மாதிரிகளையும் வழங்கியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.