உலகிலேயே மிக மிக குள்ளமான மனிதராக வாழ்ந்தவர் ககேந்திர தபா. 27 வயதான இவர் நேபாளத்தைச் சேர்ந்தவர்.
1992-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி பிறந்த இவரது உயரம் 67.08 சென்டி மீட்டர். இவரது மொத்த உடல் எடையே வெறும் 6 கிலோதான்.
கடந்த 2010-ம் ஆண்டு நிலவரப்படி உலகிலேயே மிக மிக குள்ளமான மனிதராக இவர் தேர்வு செய்யப்பட்டார். இதற்காக இவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்று இருந்தது.
கடந்த ஆண்டு வரை உலகின் குள்ளமான மனிதர் என்ற பட்டத்தை இவர்தான் தக்க வைத்து இருந்தார். பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜூன்ரே என்பவர் 59.93 சென்டிமீட்டர் உயரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் நேபாளத்தின் ககேந்திர தபா தனது குள்ள மனிதர் பட்டத்தை இழந்தார்.
கின்னஸ் சாதனை படைத்ததால் உலகின் சில நாடுகள் அவரை அழைத்து கவுரவித்தன. என்றாலும் நேபாளத்தில் அவர் சாதாரண வாழ்க்கைதான் வாழ்ந்து வந்தார். சமீபத்தில் அவருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து ககேந்திர தபா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் நேற்று பிற்பகல் அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது இறுதி சடங்குகள் இன்று நடக்கின்றன.
>AD
(Date: 18.01.2020)
Sponsored:
Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.