ஈரான் அணு உலை அருகே நிலநடுக்கம்

ஈரானில் உள்ள ரஷ்யாவின் அணு உலை உள்ள பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 7 பேர் பலியாயினர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஈரானில் போராஷ்ஜான் அருகே நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் போராஷ்ஜான் மற்றும் துறைமுக நகரமான புஷெரை சுற்றியுள்ள 60 கி.மீட்டர் சுற்றளவில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. அதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.

நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்தன. இடிபாடுகளில் சிக்கி இதுவரை 7 பேர் பலியாகினர். 30 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இடிபாடுகளை அகற்றும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். எனவே பலியானோர் எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

இங்கு 5.6 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே நிலநடுக்கம் ஏற்பட்ட போராஷ்ஜானுக்கும் புஷெருக்கும் இடையே அணுமின் நிலையம் உள்ளது. இங்கு ரஷியாவின் அணு உலை உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அதற்கு பாதிப்பு ஏற்பட்டதா என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

ஈரான் நிலநடுக்கம் சார்ந்த பகுதியில் உள்ளது. எனவே, இங்கு அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. கடந்த 2003ஆம் ஆண்டு டிசம்பரில் பாம் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 26 ஆயிரம் பேர் பலியாகினர்.

You may also like ...

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை பாதுகாக்க மீண்டும் பேச்சுவார்த்தை!

உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் மற்றும் ஈரானுக்கு இடை

இன்று 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சென்னையைத் தாக்கியது!

சென்னையிலிருந்து வட கிழக்கே 600 கிலோமீற்றர் தொலைவி

புதிய தொகுப்புகள்